தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: அமெரிக்கா

அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. அமெரிக்காவில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம். சிறு குழுக்களாக கூடும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. சலூன் கடைகள், அருங்காட்சியகம், சினிமா திரையரங்கம் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம். அமெரிக்க மக்கள் தொகையில் இதுவரை 30 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *