ஓட்டு எண்ணிக்கை தள்ளிவைப்பா? தேர்தல் அதிகாரி மறுப்பு

தமிழகத்தில், ஓட்டு எண்ணிக்கையை தள்ளி வைப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்., 6 ம் தேதி தேர்தல் நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், ஓட்டு எண்ணிக்கை தள்ளி போகலாம் என தகவல் வெளியாகின.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: மே 2ம் தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணிக்கையை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போகும் என வெளியான தகவல் உண்மை இல்லை. ஓட்டு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. மே 1 மற்றும் 2ம் தேதி ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *