தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் எத்தனை? அனைவரும் தெரிந்து கொள்வோம்

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு காலியாக உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் இருப்பு நிலை போன்ற விவரங்களுடன் தமிழக அரசு தனி வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாள்தோறும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இன்றி மக்கள் தவிக்கின்றனர். வட மாநிலங்களில் சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுவதால் நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் ஏற்படுகிறது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி அதிகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் என்னென்ன மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள தமிழக அரசு தனியாக வலைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் எத்தனை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையும் தற்போது காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையும், குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மருத்துவனையின் தொடர்பு எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி தெரிந்துக்கொள்ளலாம்?

https://stopcorona.tn.gov.in/beds.php என்னும் வலைத்தளத்தை கிளிக் செய்யுங்கள்.
* வலதுபக்கம் மேலே உள்ள Search என்னும் கட்டத்தில் உங்கள் மாவட்டத்தின் பெயரை ஆங்கிலத்தில் உள்ளிடவும்.
* இப்போது உங்கள் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை பெயர்கள் மற்றும் தொடர்பு எண், எத்தனை படுக்கை காலியாக உள்ளது என்பன போன்ற முழு விவரங்களும் இதில் காண்பிக்கப்படும்.
* ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் எண்ணிக்கை புதுப்பிக்கப்படும்.
* இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், ஆக்சிஜன், ஐசியு, வென்டிலேட்டர்கள் போன்ற தங்களின் தேவை இருப்பு நிலையை அறிந்து அந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *