கொரோனா பரவல் குறைய சுகாதார செயலர் யோசனை

அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. என்றும் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் இன்னும் கொரோனா பரவலை குறைக்க முடியும் என சுாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவர் நிருபர்களிடம் பேசியதாவது: பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொண்டால் கொரோனா பரவல் முழுமையாக குறைய வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அரசு குறைக்கவில்லை.
தமிழகத்தில் ஒரு லட்சம் அளவிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *