மே 2 வாக்குப்பதிவு: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது என பரவிய செய்தி தவறானது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் வாக்கு பதிவு வரும் மே 2ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காட்டு தீயைப்போல பரவி வருவதால் மே 2ல் வாக்குப்பதிவு நடைபெறுமா என்ற சந்தேகங்கள் எழுந்து வந்தன.

குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்திற்கும், வாக்கு பதிவின்போதும் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கொரோனா பரவல் இந்த அளவுக்கு உயர்ந்ததால் காரணமே தேர்தல் ஆணையம் தான். அதற்காக கொலை குற்றத்தையும் சுமத்தாலாம் என்று கடுமையாக சாடியது.

தொடர்ந்து, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்தது. இந்த நிலையில், மே 2ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக பேசியவர், வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது என பரவிய செய்தி தவறானது என்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலாளருடன் ஊரடங்கு, வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *