கொரோனா பரவலை தடுக்க 14.19 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இதுவரை, நாடு முழுதும், 14.19 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கிய, 100வது நாளான நேற்று முன்தினம், 11 ஆயிரத்து, 984 அமர்வுகளில், 6.86 லட்சம் பேருக்கு, முதல் டோஸ்; 3.09 லட்சம் பேருக்கு இரண்டாம் டோஸ் என, 9.95 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.இதுவரை, 14 கோடியே, 19 லட்சத்து, 11 ஆயிரத்து, 223 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. சுகாதார துறையில் பணியாற்றும், 92.98 லட்சம் பேர், முதல் டோஸ்; 60.08 லட்சம் பேர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.முன்கள பணியாளர்களில், முதல் டோஸ் தடுப்பூசியை, 1.19 கோடி பேரும்; இரு டோஸ்களை, 63.10 லட்சம் பேரும் பெற்றுள்ளனர்.


நாட்டில், 60 வயதுக்கு மேற்பட்டோரில், 4.98 லட்சம் பேர், முதல் டோஸ் பெற்றுஉள்ளனர். 79.20 லட்சம் பேர், இரு டோஸ்களும் செலுத்தி உள்ளனர்.அதேபோல், 45 – 60 வயதிற்கு உட்பட்டவர்களில், 4.81 கோடி பேர், முதல் டோஸ் மற்றும் 24.03 லட்சம் பேர், இரு டோஸ் செலுத்திக் கொண்டனர். இதுவரை செலுத்தப்பட்டுள்ள, 14.19 கோடி டோஸ் தடுப்பூசிகளில், 58.7 சதவீதம் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் செலுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

3.52 லட்சம் பேர் பாதிப்புகடந்த, 24 மணி நேரத்தில், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான, 3.52 லட்சம் பேருடன், தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, 1.73 கோடியை கடந்துள்ளது. இவர்களில், 1.43 கோடிக்கும் மேலானோர் குணமடைந்து உள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, நேற்றைய நிலவரப்படி, 28.13 லட்சமாக உள்ளது. கொரோனாவால் நேற்று ஒரே நாளில், 2,812 பேர் பலியாயினர்.
மஹாராஷ்டிராவில் மட்டும், 832 பேர் இறந்துள்ளனர். டில்லியில், 350; உத்தர பிரதேசத்தில், 206; சத்தீஸ்கரில், 199; குஜராத்தில், 157; கர்நாடகாவில், 143 இறப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரையிலான கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 95 ஆயிரத்து, 123 ஆக அதிகரித்து உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *